பக்கம்:குறள் நானூறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்கு நேரும் துன்பத்தைத் தன் மனவலிமை யால் தாங்குதலும், எவ்வுயிர்க்கும் சிறு இடையூறும் செய்யாதிருத்தலுமே தவம். தவத்தின் வடிவத்திற்கு இவையே அளவு, - 106 துறவி தன்மனத்தில் வஞ்சத்தைக் கொண்டால் தன் நிலைக்குக் கூடாத ஒழுக்கத்தைக் கொள்வான். அந்தக் கூடாத ஒழுக்கத்தை அவனது உடலின் மூலப் பொருள்களான ஐந்து பூதங்களும் கண்டுகொள்ளும், அவை தன்னகத்தே அவனை எண்ணி ஏளனம்ாக நகைக்கும். 107 - தீயண்ைணங்களை மனத்தில் கொண்டதுறவிகளும் உளர். அவர் அவற்றை மறைக்க நீராடி உடலால் தூயராய் ஒழுக்க சீலர்போல் நடிப்பர். இத்தகைய துறவிகள் உலகில் பலராய் மலிந்துள்ளனர்.

தோணலின்றி நேராகத் தோற்றமளிக்கும் அம்பு தன் கொலைச்செயலால் கொடியது. கோணலாய்த் தோற்றமளிக்கும் யாழின் தண்டு இசைதருவதால் இனியது. இவற்றைக்ாொண்டு, மக்களது துறவிக்ளது தோற்றத்தை விட்டு அவரது செயல்களைக்கொண்ட்ே அவரது பெருமையை அறிய வேண்டும். 109 உலகத்துச் சான்ருேர் பழித்துக் கூறும் திய க் கங்களை ஒழிக்கவேண்டும். ஒழித்தால், ಸಿ. 醬 டையடித்துக்கொள்ளுதலும், சடை, தாடி வளர்த்துக் கொள்ளுதலுமாகிய வெளிக் கோலங்கள் கொள்ள வேண்டா. - 1 10

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/56&oldid=555553" இலிருந்து மீள்விக்கப்பட்டது