பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஒ புலவர் கா. கோவிந்தன்

தன்மேல் ஏற்றுக்கொண்டு, தன் தோழியின் துயர் துடைக்கத் துணியும் இத்தோழியின் அன்பினை எவ்வாறு பாராட்டுவேன். யான் செய் தவறினை, என்மலை நாட்டு மாண்பினைப் பாராட்டுவாள் போல், 'அன்ப! நீயும் நின் காதலியும் இணை பிரியாதிருந்து இன்பம் துய்த்தற்குத் துணை புரியவல்ல திருமணம் செய்து கொள்ளும் கருத் திழந்து, இன்பத்திற்கு இடையூறு பல பயக்கும் இரவுக் குறியிலும், பகற்குறியிலும் எண்ணத்தை விடுத்து, இன்பம் பெற மாட்டாது வருந்தும் நின் அறியாமையினை. என்னென்பேன்! எனக் கூறாமற் கூறி இடித்துரைக்கும் இவள் அறிவின் திறத்தை என்னெனப் புகழ்வேன்!" என்றெல்லாம் எண்ணி இறுதியில் அவள் வருந்த இவள் இடித்துரைக்கக் காரணமாய இக்களவொழுக்கத்தை இன்றே கைவிட்டு, வரைவிற்கு ஆவனவற்றை விரைந்து மேற்கொள்வேன்!” எனும் துணிவோடு தன் ஊர் சென்றான்.

இளைஞன் மனத்தை மாற்றிய தோழியின் மாண் நிறை சொற்களைச் சுவைபடக் கூறுகிறது இச்செய்யுள்:

"வியகம் புலம்ப, வேட்டம் போகிய மாஅல் அம்சிறை மணிநிறத் தும்பி, வாய்இழி கடாத்த, வான்மருப்பு ஒருத்தலோடு ஆய்பொறி உழுவை தாக்கிய பொழுதில், வேங்கையஞ் சினை என, விறற்புலி முற்றியும், 5

பூம்பொறி யானைப் புகர்முகம் குறுகியும், வலிமிகு வெகுளியால், வாள்.உற்ற மன்னரை நயன்நாடி நட்புஆக்கும் வினைவர்போல் மறிதரும்