பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ↔ 101

முடிப்பான் வேண்டி, அவ்வரசர்களிடையே பலமுறை மாறிமாறிச் சென்று மீள்வதைப் போல், புலியின் உடலிற் கும், யானையின் துதலுக்குமாக, மாறி மாறி அலைந்து திரியும் அழகிய காட்சிகளையும், பள்ளத்தே பாய்ந்தோடும் அருவிகளையும் கொண்ட மலைநாட்டிற்குரியனாய நீ, நாள்தோறும் தவறாது வருகின்றனை. ஆகவே, அவள் வருத்தத்திற்கு நீயும் காரணம் அல்லை. அவளும், நின் வருகையை எதிர் நோக்கி, ஒவ்வொரு நாளும் உறக்கம் கெட்டு விழித்துக் கொண்டுள்ளாள். ஆதலின், அதற்கு அவளும் காரணம் அல்லள். ஆயினும், 'கருதி வந்த இன்பம் கைகூடப் பெறாமைக்கு, என்னைக் காணவராது, ஏமாற்றிய அவளே காரணமாம்! என, நீ கருதுவதாக அறிந்து, என் மீது பழியில்லையாகவும் என்னை அவன் பழிக்கின்றனனே, இதற்கு என் செய்வேன்? எனக்கூறி வருந்துகின்றாள் நின் காதலி. அன்ப! அவள் வருத்தம் போக்கிப் பேரின்பம் நுகர வேண்டின், அவள்பாற் சென்று, நாம் இருவரும் ஒருவரையொருவர் கண்டு மகிழாவகைப் பிழை புரிந்தோர் நீயும் அல்லை. பிழை புரிந்தோன் யானும் அல்லன். அப்பிழை புரிந்தாள் நின் தோழியே! எனப் பொய்யொன்று கூறுவாயாக நின் எண்ணமே, அவள் எண்ணமாம். நீ கூறியதையே அவளும் கூறுவள். ஆதலின் நீ கூறியதை உண்மையெனக் கொண்டு உளம் தேறுவள்!” என்று கூறி நிறுத்தினாள்.

அவ்வாறு கூறக் கேட்ட அவ்விளைஞன்,

'இன்பம் இருப்பதாக எண்ணி யான் விரும்பும் இவ்விரவுக்குறி, பகற்குறிகளால் என் காதலி இவ்வளவு துயர் உற நேர்ந் ததே என்னே என் அறியாமை! யான் செய் தவறினைத்