பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இ. புலவர் கா. கோவிந்தன்

அப்பெண்ணின் துயர்நிலை கண்ட தோழி. இவ்வாறு இவளைக் காணமாட்டாது அவன் வருந்துதற் கும், அவனைக் காணமாட்டாது இவள் வருந்துதற்கும், அவ் விள்ைஞன், இவளைப் பலர் அறிய மணந்து மனையறம் மேற்கொள்ளும் கருத்திலனாய், இவ்வாறு மறைந்து ஒழுகும் இக்களவொழுக்கக் கருத்துடையனாய், இரவிலும் பகலிலும் வந்து செல்வதே காரணமாம். ஆதலின், இம் முறையினைக் கைவிட்டு, மணத்திற்கு வழி செய்யுமாறு அவனை வற்புறுத்துதல் வேண்டும், எனத் துணிந்தாள். -

அவ்வாறு துணிந்த தோழி, ஒரு நாள் அவ் விளைஞன் வந்தான்ாக, அவனை அன்போடு வரவேற்று, "ஐய! தனக்கு இன்பம் அளிக்கவல்ல தேன் நிறைந்த மலர் அத்தேனை உண்ணத் தான்் வாராமை கொண்டு வருந்த, தேன் உள்ள அம்மலரிற் கிடந்து தேன் உண்டு மகிழக் கருதாது ஒடிய ஒரு தும்பி, இடைவழியில் ஒரு புலியும் ஒரு யானையும் போரிடுதல் கண்டு, புள்ளிகள் நிறைந்த புலி யின் உடலை மலர்கள் நிறைந்த வேங்கை மரக்கிளையாக வும், யானையின் முகத்துப் புள்ளிகளை அவ்வேங்கை மரக் கிளையில் மலர்ந்து கிடக்கும் மலராகவும் கருதி மயங்கி, அவற்றில் தேன் உண்ண வேண்டி, முதலில் புலியின் உடலை அடுத்து நோக்க, அங்கு மதுதரும் மலர் இன்மை கண்டு, அதை விடுத்தும், யானையின் முகத்திற் சென்று நோக்க, ஆங்கும் ஏமாற்றமே உற்று, அதையும் விடுத்து, இவ்வாறே, பகைத்து நிற்கும் இரு பேரரசர்களை, அவர் பகையொழித்து வாழ்விக்க விரும்பிய சான்றோர் ஒருவர், அவர்க்கு வேண்டும் அறிவுரை வழங்கி, அதை