பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இ. புலவர் கா. கோவிந்தன்

ஒளிறுவேல் வலன்ஏந்தி, ஒருவன்யான் என்னாது 20 களிறு இயங்கு ஆரிடை ஈங்குநீ வருவதை;

அதனால், இரவில் வாரல்; ஐய! விரவுவி அகல் அறை வரிக்கும் சாரல்

பகலும் பெறுவை இவள் தடமென் தோளே." 25

தோழி, இரவு வருவானை, இடைவழியின் ஏதம் கூறிப் பகல் வருக எனப் பகற்குறி நேர்வாள் போல், அதுவும் மறுத்து வரைவு கடாயது எனும் துறையமைய வந்துளது இச்செய்யுள்.

உள்ளுறை புலியை வென்று துயிலும் யானை, அயலார் கூறிய அலர் கேட்டுச் சினந்த தாயை, அது பொய்யெனக் கூறித் தேற்றிய தலைவி, யானை கனவிற் கண்டு வெருளல், தலைவி அந்நிகழ்ச்சியைக் கனவிலும் கண்டு கலங்கியது. அது வேங்கையை அழித்தல், தலைவி, களவிற்குத் துணை செய்வதால் கொடியள்போலத் தோன்றிய தோழியைச் சினந்து கொண்டது. அது சினம் தணிந்து நாணியது, சினம் தணிந்த தலைவி, தோழியின் உண்மை அன்பை உணர்ந்து, அத்தகையாளைச் சினந்த தன் தவறு நினைந்து அவளைக் காணவும் நாணியதாம்.

1. கொடுவரி-வளைந்த கோடுகளை உடைய புலி, 4. 'வெரீஇ-மருண்டு, 5. முருக்கி-அழித்து, 7. முன்பு-வலி, 10. போது-மலரும் நிலையில் உள்ள பேரரும்பு, 12. மின்-மின்னல். ஒரும்-ஆராய்ந்து பார்க்கும். 17. அணங்கு - ஆடவரை வருத்தும் பெண்தெய்வம்; சூரரமகளிர் என்பார் இவரே. 18. உறழ்-சிறப்புடைமையால் மாறுபட்ட இருங்கூந்தல்-கரியகூந்தல். 23. வி-மலர்; 24 வரிக்கும் - அழகு செய்யும்.