பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 125

அவ்வாறு அவர்கள் கருதுவதும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத் தக்கதே,” என்று இவ்வாறு எண்ணி முடிவு செய்து, மணத்திற்கு வழி செய்யும் மனத்தினனாய் ஆங்கிருந்து மீண்டான்.

அவனை, அவ்வெண்ணம் கொள்ளுமாறு தூண்ட வல்ல தோழியின் சொற்களைச் சுவைதரும் தொடராக்கி அளிக்கிறது. இச்செய்யுள்: “கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை, நனவில் தான்்செய்தது மனத்தது ஆகலின், கனவிற் கண்டு, கதும்என வெரீஇப்,

புதுவதாக மலர்ந்த வேங்கையை - 5 அதுஎன உணர்ந்துஅதன் அணிநலம் முருக்கிப் பேணா முன்பின் தன்சினம் தணிந்து அம்மரம் காணும் பொழுதில் நோக்கல் செல்லாது, நாணி இறைஞ்சும் நன்மலை நன்னாட!

போது எழில்மலர் உண்கண் இவள்மாட்டு, நீஇன்ன 10 காதலை என்பதோ இனிது; மற்றுஇன்னாதே, மின்ஒரும் கண்ணாக, இடிஎன்னாய், பெயல்என்னாய், இன்னதோர் ஆரிடை ஈங்குநீ வருவதை, இன்புற அளித்தனை இவள்மாட்டு நீஇன்ன

அன்பினை என்பதோ இனிது;மற்று இன்னாதே, 15 மணங்கமழ் மார்பினை, மஞ்சுஇவர் அடுக்கம் போழ்ந்து அணங்குஉடை ஆரிடை ஈங்கு நீ வருவதை; இருள் உறழ் இருங்கூந்தல் இவள்மாட்டு நீஇன்ன அருளினை என்பதோ இனிது; மற்றுஇன்னாதே.