பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இ புலவர் கா. கோவிந்தன்

தான்். அக்காலை, ஆங்குத் தினைப்புனம் காத்திருந்த ஒரு பெண்ணைக் கண்டான். இயற்கையின் பயனாம் பலா முதலாம் பழ வகைகளையும், உழுது விளைத்துப் பெறும் நெல் முதலாம் உண்வுப் பொருட் குவியல்களையும், குறைவறக் கொண்ட, குறிஞ்சி நிலச் செல்வன் ஒருவன், மகப்பேறின்றிப் பல்லாண்டு வருந்திப் பேரறம் பல புரிந்து பெற்றெடுத்த சிறப்புடையாள் அவள்.

வில்லேந்தி வேட்டைக்குச் சென்ற அவ்விளைஞன், ஆங்குத் தினைப்புனக் காவல் மேற்கொண்டிருந்த அப் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் அறிவிழந்து, தான்் மேற்கொண்டு வந்த வேட்டைத் தொழிலையும் மறந்து, வில்லைக் கீழே ஊன்றி, அதன்மீது வைத்த கையனாய், அப் புனத்தருகே நின்று, அவளைக் காதற்கருத்தோடு பல கால் நோக்கினான். அந்நிலையில் நிற்கும் அவனையும், வில்லின்மீது வைத்த கையனாய்க் காட்சியளிக்கும் அவன் பேரழகையும், அருளும் அன்பும் புறம்போந்து புலப்பட நோக்கும் அவன் கண்வழிக் கருத்தையும் கண்ட அப் பெண்ணும், தன் கருத்திழந்து, அவன்பாற் காதல் கொண் டாள். காதல் மிகுதியால் தன் கடமையை மறந்தாள். புனத்தில் கிளிகளும் குருவிகளும் புகுந்து கதிர்களைக் கொய்து கொண்டு செல்லவும், அவற்றைக் கவண் கல்லெறிந்து ஒட்டுதலைச் செய்திலள். அவள் அவன்மீது கொண்ட பெருங்காதல், அவள் கருத்தையும் கடமையை யும் ஒருங்கே சிதைத்தது. அவ்விருவர்க்கிடையே இவ்வாறு அன்று தோன்றிய காதல், இடையூறு எதுவும் இன்றி வளரத் தொடங்கிற்று. -