பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி & 129

அப் பெண்ணின் செவிலித்தாய் வயிற்றில் மகளாய்ப் பிறந்து, அப்பெண்ணோடு உடன்வளர்ந்து, உடன் உண்டு, உடன் ஆடி வருபவளாய உயிர்த்தோழி ஒருத்தி இருந்தாள். ஒழுக்கம் உடையவள்; உலகியல் உணர்ந்தவள். அப்பெண் னின் நல்வாழ்வில் நாட்டம் உடையவள்; அவள் நல்வாழ்வு வாழ வழித்துணை புரிவதே தன் வாழ்வின் கடமையாம் எனக் கொண்டவள்; கொண்ட கருத்தைக் குறைவின்றி முடிக்க வல்ல அறிவுத் திறனும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றவள். இத்தகையளாய அத்தோழி, இவர்கள் காதல் உறவினை அறிந்தாள். இளைஞன் எல்லா வகையாலும் சிறந்தான்ாதல் அறிந்து, அகமகிழ்ந்து, அவர் கள் காதல் வளரப் பெருந்துணை புரிந்தாள். பெண்ணின் இன்ப வாழ்வே, தன் இன்ப வாழ்வாம் எனக் கருதும் அவள், அப் பெண் துயர் அறியாத் துாய வாழ்வினளாதல் வேண்டும் என விரும்பினாள்.

மலைச்சாரலில், மகிழ்ந்து ஆடித் திரியும் வருடை மான் கன்றைப் பற்றிக் கொணர்ந்து வளர்க்கும் கானவர், அதன் மென்மையும் மருட்சியும், உணர்ந்து, அதைத் தம் குழந்தையை வளர்ப்பதினும், அருமையாகப் பேணி வளர்ப்பர். அது போல், பெற்றோரால் பேணி வளர்க்கப் பட்டவள் அப்பெண். அவளை அவர்கள் சிறிது பிரியி னும், அந்நிலையே, தன் அழகெல்லாம் அழிந்து போமளவு பெருந்துயர் கொண்டு விடுவள். அத்துணை மெல்லிய இயல்புடையவள் அவள். அவளோடு பிறந்த நாள் தொட்டுப் பழகி அறிந்த இவ்வியல்பினை, இளைஞனுக்கு அறிவித்து, அவன் அவளைச் சிறிது பொழுதும் பிரியாதி

குறிஞ்சி-9