பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஒ புலவர் கா. கோவிந்தன்

ருந்து பேணிப் பாராட்டுமறு வேண்டிக் கொள்ளுதல் வேண்டும் எனக் கருதினாள்.

ஒரு நாள், அவ்விளைஞன் வந்திருந்தபோது, அவனை அழைத்து, "அன்ப! மழையென வழங்கும் நின்கொடை வளத்தையும், அக் கொடைக் குணம் குன்றாவாறு நின்று காக்கும் நின் அருள் உள்ளத்தையும் யான் அறிவேன். கொடுமையினை ஒரு சிறிதும் உளங் கொள்ளாக் குணம் உடையை என்பதை அறிந்தும், நினக்குச் சில அறிவுரை கூற விரும்புகின்றேன். அன்ப! தேரிற் பூட்டிய குதிரைகள், இயல்பாகவே விரைந்து செல்லும் என்றாலும், கருதிய இடத்தை விரைந்தடைதல் வேண்டும் எனும் தன் வேட்கை மிகுதியால், தேர்ப்பாகன், அக்குதிரைகளைத் தாற்றுக் கோல் கொண்டு துரத்துவது போல், பிறர்க்கு இன்ப மல்லது துன்பம் செய்தறியாக் குணத்தை நீ இயல்பாகவே பெற்றுள்ளாய் எனினும், என் தோழி, நின் காதலி, துன்பம் அறியா இன்ப வாழ்வினளாதல் வேண்டும் என்ற என் வேட்கையின் மிகுதியால், அறிவன அறிந்த ஆன்றோனாய நினக்கே, அறிவுரை கூற முன் வந்துவிட்டேன். அதற்காக, முதற்கண், என்னை மன்னிக்கவும். அன்ப! நின் மலை நாட்டுப் பெண் யானை, முற்றி முதிர்ந்து இயல்பாகவே வளைந்து கிடக்கும் மூங்கிலின் தழையையும் நெல்லையும் ஆர உண்டு, இலைகள் பல விட்டு நெருங்க வளர்ந்திருக்கும் வாழைக்காட்டினுள் புகுந்து, ஆங்கு வருடை மான் குட்டி கள் மருண்டு நோக்காது, மகிழ்ந்து விளையாடி, ஒருபால் கிடந்து அயர்ந்து உறங்கும் காட்சியினைப் பலகால் கண்டு களிக்கும் நினக்கு ஒன்று கூறுகின்றேன். அன்ப! குணத்தா