பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஒ 131

லும், கொற்றத்தாலும் சிறந்து எம்போல்வார்க்கு அரியனாய நீ, இவள்பால் கொண்ட அன்பால் எளியனா கவே, என் தோழி, நின் நட்பை எளிதிற் பெற்றுவிட்டாள். நின் அன்பைப் பெற்ற இவள், நின்னை மணந்து, நின் மனை புகுந்து, அலர் கூறிப் பழிப்பாரைக் காணாது, நின் உற்றாரும் பெற்றோரும் உடனிருந்து பாராட்ட, இல்லறம் மேற்கொள்ள விரும்புகின்றாள். அன்புடைய நின்னைச் சிறிது போதும் பிரிந்து தனித்து வாழாள். நின்பாற் கொண்ட காதல் மிகுதியால் தன் கடமையையும் மறந்து போகும் மாண்புடையளாய இவளைச் சிறிது பிரியினும், அப் பிரிவுத் துயரம், அளவின்றி பெருகத் தன் நலம் கெட்டு நலிவள். ஆகவே, அன்ப! தம் கைப்பட்ட மான் கன்றைக் கானவர் சிறிதும் பிரியாது பேணி வளர்த்தல் போல், இவளை எக்காலத்தும் பிரியாது, என்றும் இவள் நலத்தையே நினைத்துக் காத்தல் வேண்டும். இதுவே என் விழைவும், வேண்டுகோளுமாம்!” எனக் கூறினாள்.

தோழியின் இவ் வன்புள்ளத்தை ஒவியமாக்கி உணர்த்துகிறது இச்செய்யுள்:

"வாங்குகோல் நெல்லொடு வாங்கி வருவைகல் மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும்பிடி, தூங்கு இலைவாழை நனிபுக்கு ஞாங்கர் வருடை மடமறி ஊர்விடைத் துஞ்சும் இருள்துங்கு சோலை இலங்குநீர் வெற்ப! 5

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவுவில் மேல் அசைத்த கையை ஒராங்கு