பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஒ. புலவர் கா. கோவிந்தன்

நிரைவளை முன்கை என் தோழியை நோக்கிப் படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல் கடிதல் மறப்பித்தா யாயின், இனிநீ 10 நெடிது உள்ளல் ஒம்புதல் வேண்டும். இவளே, பல்கோட் பலவின் பயிர்ப்புஉறு தீங்கனி அல்கறைக் கொண்டுஊண் அமலைச் சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள். நீயே, வளியின் இயல்மிகும் தேருங்களிறும் 15 தளியிற் சிறந்தனை, வந்த புலவர்க்கு அளியொடு கைது வலை.

அதனால்,

கடுமா கடவுறுஉம் கோல்போல் எனைத்தும் கொடுமை இலையாவது அறிந்தும் மடுப்பல், 20 வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி உழையிற் பிரியின் பிரியும் இழையணி அல்குல் என் தோழியது கவினே!"

தோழியிற் கூட்டம் நிகழ்ந்த பின்னர், முன்னர்த் தலைவியைத் தருமாறு தன்னைப் பணிந்து நின்ற தலைவனைத் தோழி, தான்் பணிந்து ஒழுகியது எனும், துறையமைய வந்துளது இச்செய்யுள்.

உள்ளுறை மூங்கில் மிசைந்த பிடி, தலைவன் அன்பைப் பெற்ற தலைவி. யானை, வாழைத் தோட்டம் புகுந்தது, தலைவி, தலைவனை மணந்து அவன் மனை புகுந்தது. புலி முதலியன இன்றி, மறி விளையாடும் இடத்தே உறங்கியது, அலர்கூறும் அயலாரைக் காணாது,