பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 133

தன் நலம் பாராட்டும் தலைவன் சுற்றத்தாரிடையே மனையற மாண்பில் ஆழ்ந்துவிடல்.

1. வாங்கு-வளைந்த, கோல்-மூங்கில்; வைகல்-விடியற் காலம், 3. தூங்கு-செறிந்த, நளி-நெருங்க வளர்ந்த தோட்டம்; ஞாங்கர்-ஆங்கு 4. மறி-குட்டி, ஊர்வுஇடை ஆடுமிடம், 7. உரவுவன்மையும் உறுதியும், 9. குரல் - கதிர்; ஏனல்-தினை; 11. உள்ளல்-நினைத்தல், ஒம்புதல்-மேற்கொள்ளுதல்; 12. பயிர்ப்பு -மரப்பிசின்; 13. அல்கு-வீழ்ந்து கிடக்கும்; அமலை-பெருஞ் சோற்றுத்திரள், 14. நல்கூர்ந்தார்-ஈண்டு மகப்பேறில்லா வறுமை உற்றவர்; 15. வளி-காற்று 16. தளி-மழைத்துளி, 17. அளி-அருள்; கைதுவல்-கைஒழியாமை; 19. கடுமா-இயல்பாகவே விரைந்து செல்லும் குதிரை, கடவுறுஉம்-செலுத்தும்; எனைத்தும்-சிறிதும்; வழை-சுரபுன்னைமரம், 23. உழை-இடம்; உழையின்-இடத்தி னின்றும்.