பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

என் கை பற்றினான்!

தமிழ்நாட்டுப் பேரூர் ஒன்றின் தெரு. சிறுவர்களும் சிறுமிகளுமாகத் தமிழ்நாட்டின் வருங்காலச் செல்வச் சிறார்கள், ஒன்று கூடி ஆடியும் பாடியும் அகமகிழ்ந்து திரிகின்றனர். அவர்களுள் செல்வச் சிறப்புத் தோன்ற விளங்குவாள் ஒரு பெண், தலைவாரி முடித்து, அதில் பன்னிற மலர் கொண்டு தொடுத்த மாலையை அழகாகச் சூடிக் கொண்டு, கையில் பந்தேந்தி வந்தாள். வந்தவள். தன்னைப் பிரியாது வாழும் பேரன்புடைய தன் தோழி துணை செய்ய மணல்வீடு கட்டி மகிழ்ந்தாடத் தொடங்கி னாள். அந்நிலையில் ஆங்கு வந்தான்் ஒரு சிறுவன். பெற்றெடுத்த தாய் தந்தையர்க்கோ, பிறந்த ஊரில்வாழ் பெரியோர்க்கோ அடங்காது ஆடித் திரியும் இயல்புடை யான் அச்சிறுவன். ஆங்குவந்த அவன், அம்மகளிர் கட்டிய மணல் வீட்டைக் காலால் சிதைத்தான்். அவள் அணிந்தி ருந்த கூந்தல் மலரைப் பிய்த்து எறிந்தான்். அவள் கைப் பந்தைக் கவர்ந்தோடி மறைந்தான்். அவன் செயலால்,