பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 135

அன்றெல்லாம் அழுது அழுது, ஆறாத்துயர் உற்றாள் அப் பெண். இந்நிகழ்ச்சி நடைபெற்றுப் பல்லாண்டுகள் கழிந்தன.

அவன் வளர்ந்து பெரியவனாயினான்; அவளும் வள்ர்ந்து பெரியவளாயினாள். அவன் அவளை மறந்தி லன். மாறாக அவள்மீது மாறாத அன்பு கொண்டான். அவ்வன்பு நாள்தோறும் வளர்ந்தது. அவளைக் கண்டு, தன் காதல் உள்ளத்தைத் திறந்துகாட்டி, அவள் அன்பைப் பெறத் துடிதுடித்தான்். ஆனால், அவள் வீடு செல்வம் கொழிக்கும் சிறப்புடைத்து ஆதலின், ஆங்குச் செல்லுதல் அத்துணை எளிதன்று. மேலும், தன் மகளைத் தன் நிழல் போல் பிரியாதிருந்து பேணி வளர்ப்பவள் அவள் தாய். அவள் அறியாவாறு, அப்பெண்ணைக் காண்டலும் இய லாது. அதனால், அவளைக் காணப் பலமுறை முயன்றும், அவனால் இயலாது போயிற்று. ஆயினும் தன் முயற்சியைக் கைவிட்டானல்லன். இறுதியில், அவளைக் காணலாம் வழியொன்று அவனுக்குப் புலப்பட்டது. அவள் வீட்டார், தம் வீடு நோக்கி வரும் விருந்தினரை வரவேற்றுப் பேணும் வேளாண்மைக் குணம் வாய்க்கப் பெற்றவர் ஆதலின், அவர்கள் உணவுண்ணும் காலத்தே அவர் வீடு செல்லின், தன்னை விரட்டாது வரவேற்பர். அதைப் பயன்கொண்டு, அவளைக் கண்டு, தன் காதலை அறிவித்து, அவள் அன்பைப் பெற்று விடலாம் என எண்ணினான்.

அவ்வாறே, ஒரு நாள், உணவுண்ணும் நண்பகற் காலத்தே, அப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றான். சென்று வாயிற்கண் நின்றவாறே, வீட்டில் உள்ளாரை