பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஒ. புலவர் கா. கோவிந்தன்

விளித்து, உண்ணுநீர் வேண்டினான். அக்காலை, வீட்டில் குற்றேவல் புரிவாரோ, வேறு உற்றார்களோ இலர். அப் பெண்ணும், அவள் தாயுமே இருந்தனர். தாய் தன் மகளை அழைத்து, "மகளே! வாயிற்கண் நீர் வேண்டி நிற்கின்றான் ஒரு மகன். பொற்கலத்தில் நீர் மொண்டு சென்று அவனுக்கு ஊட்டிவா" எனப் பணித்தாள். தாய் இட்ட பணியை மறுக்க மாட்டாமையாலும், வாயிற்கண் நிற்போன், பண்டு, தன் ஆட்டத்தைக் கலைத்து அல்லல் புரிந்த அப்பட்டி மகன் என்பதை அறிய மாட்டாமை யாலும் அவளும் நீர் கொண்டு வந்தாள்.

வந்தவள், வாயிற்கண் நின்றான்.பால் உண்ணுநீர்க் கலத்தை நீட்ட, அவ்விளைஞன், அவள் தந்த கலத்தை வாங்கிக் கொள்ளாது, அதை நீட்டி நின்ற கையைத் திடுமெனப் பற்றிக் கொண்டான். இதை அவள் எதிர் பார்க்கவில்லை. எதிர்பாரா வகையில் அயலான் ஒருவன் தன் கையைப் பற்றவே அவள் சிந்தை கலங்கிவிட்டது. அந்நிலையே, "அம்மா! இவன் செய்வதைப் பாரேன்!” என்று கதறி விட்டாள். அது கேட்ட தாய், என்ன கேடு நிகழ்ந்து விட்டதோ என்னும் அச்சம் அலைக்கழிக்க, அலறிப் புடைத்துக் கொண்டு ஆங்கு ஓடிவந்தாள். இதற் கிடையே, அவன் இன்னான் என்பதை அவள் அறிந்து கொண்டாள். மேலும், அவன் பார்த்த பார்வை, அவன் அவள்பால் கொண்டுள்ள பேரன்பையும், அப்பேரன்பு மிகுதியால் தகாதன செய்து தன்னைத் தாய்முன் காட்டிக் கொடுத்து விடாதே என்று கூறாமற் கூறி அவன் கொள்ளும் அச்சத்தையும் அவளுக்கு உணர்த்திற்று. அந் நிலையில், அவனைக் கண்ட அவளுக்கும், அவன்பால்