பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 137

அன்பு பிறந்து விட்டது. மேலும், அயலான் ஒருவன் தன் கையைப் பற்றினான்! எனக் கூறல் பெண்மைக்கு இழுக் காம் என உணர்த்திற்று அவள் பெண் உள்ளம். ஆகவே தாய் ஆங்கு வந்தவுடனே, நடந்ததை மறைத்துவிட்டு, "அம்மா! உண்ணு நீரை விக்கினான் இவன்!" எனத் துணிந்து பொய் கூறினாள். அது கேட்ட தாய், அவன் அண்மையிற் சென்று, அவன் மார்பை அன்போடு தடவிக் கொடுத்துக் கொண்டே, "தம்பி உண்ணும் நீரை மெல்ல உண்பதற்கென்ன ? விரைந்து உண்ணல் வேண்டுமோ?" என்பன போலும் அன்புரை வழங்கி, அவனைக் கண்டித் தாள். தாய் அது செய்து கொண்டிருக்க, அவன், துணிந்து தான்் செய்த செயலையும், அதுகண்டு அவள் நடுங்கிய நடுக்கத்தையும், தன்னையும் தன் அன்பையும் அறிந்து கொண்ட அந்நிலையே அவள் தன்னைக் காத்தற் பொருட்டுத் துணிந்து ஒரு பொய் உரைத்துத் தன் தாயையே ஏமாற்றத் துணிந்ததையும் கண்டு, தன் நன்றியையும், அவள்பால் கொண்டுள்ள தன் காதலையும் ஒருங்கே உணர்த்துமாறு, அவளைக் கடைக்கண்ணால் நோக்கினான். அந்நிலையே, அவளும் அவன்பால் காதல் கொண்டாள்.

- அன்று தொடங்கிய அவர்கள் காதல், நாள்தோறும் வளர்ந்தது. அவளும் தன் காதல் நிறைவேறத் தன் தோழி யின் துணை இன்றியமையாதது என்பதை உணர்ந்தாள். அதனால், ஒருநாள் தன் தோழியை அழைத்து, அவள்பால் அவனையும் பட்டியாய்த் திரிந்த பிள்ளைப் பருவத்தில், அவன் செய்த சிறுசெயலையும், அத்தகையான் இன்று காட்டும் பேரன்பையும், அப்பேரன்பைப் புலப்படுத்தும்