பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஆ 141

அப் பெருமிதம் தோன்ற, கம்சன் ஏவ வந்து போரிட்ட சானூரன் முதலாம் மல்லர்களை வென்று, அவ்வெற்றி யால் மகிழ்ந்து ஆரவாரிக்கும் தன் இனத்தாரிடையே மகிழ்ந்து செல்லும் கண்ணனைப் போல், தன் வெற்றி கண்டு மகிழும் தன் யானைக் கூட்டங்களோடு சேர்ந்து, அம்மலைச் சாரலில் உலா வந்தது.

இத்தகைய வளமிக்க நாட்டிற்கு உரியான் ஓர் இளைஞன், தன் ஊரை அடுத்திருந்த மற்றொரு மலை யரசன் மகளைக் கண்டு காதல் கொண்டான். அவளும் அவன்பால் காதல் கொண்டாள். அவளை, அவள் பெற்றோர், புறம் போகவிடாது, பேணிக் காத்து வந்தன ராதலின், அவன் நாள்தோறும், அவள் பெற்றோர் அறியா வாறு, அவளுருக்குச் சென்று, கண்டு மகிழ்ந்து வரத் தொடங்கினான்.

ஒரு நாள், மணம் நாறும் சந்தனம் பூசிய மார்பில், தாமரை மலர் கொண்டு தொடுத்த மாலை கிடந்து அணி செய்ய, அவன் வந்தான்். அவ்வாறு வந்தான்ை, அவ்வூரார், மணம் நாறும் மாலை அணிந்து, மாலையிற் கோயில் கொண்டு, பூவும் புகையும் பலியாகப் பெறும் முருகன் திரு மேனி கொண்டு, உலாவருவதாகக் கருதி அவனை அணுக வும் அஞ்சி அகன்றனர். அதனால், அன்று இடையூறு ஏதும் இன்றி, அவளைக் கண்டு மகிழ்ந்து மீண்டான்.

மற்றொரு நாள், நீராடி, ஈரம் புலராத ஆடைமீது, தன்னைப் பிறர் அறிந்து கொள்ளாவாறு மறைக்கவல்ல கருநிறப் போர்வை போர்த்து வந்தான்். அவனை அந்தக் கோலத்தில் இரவிற் கண்ட அவ்வூர் மக்கள், அவனைத்