பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மணக் கோலம் கண்டு மகிழ்வேன்

மரங்கள் மண்டி வளர்ந்த ஒரு மலைச்சாரல், அம் மலைச்சாரலில் மதம் மிக்க யானையொன்று பெருமிதம் தோன்றச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ணுற்ற ஒரு புலி, அதைக் கொன்று, அதன் துதலைப் பிளந்துண்ண விரும்பிற்று. ஆனால், அவ்யானையின் முன் சென்று தாக்க அதற்கு அச்சம். அதனால், அடித்து வீழ்த்தற்கேற்ற இடத்தையும் காலத்தையும் எதிர்நோக்கி, அதைப் பின் தொடர்ந்தது. முறம்போலும் தன் இரு காதுகளும், பின் தொடரும் அப்புலியை மறைத்து விட்டமையால், யானை அதை அறிந்து கொள்ளவில்லை. யானை சிறிது துரம் பின் தொடர்ந்து சென்றதும், அப்புலி யானை மீது திடுமெனப் பாய்ந்து தாக்கிற்று. அதனால் கடுஞ்சினம் கொண்ட யானை, அப்புலியை அதன் மார்பில் தன் கோடுகளாற் குத்தி, துரியோதனனை, அவன் தொடையில் கதை கொண்டு தாக்கி, உயிரைப் போக்கி வென்ற பீம சேனனைப் போல், கொன்று வென்றது. பின்னர், வென்ற