பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 143

உணர்ந்ததே காரணமாம் என்பதை அவன் அறியான். ஆனால், இவ்வாறே, எவரும் அறியாவாறு இரவிலும் பகலினும் வந்து செல்வதையே வழக்கமாக மேற்கொள்ளத் தொடங்கினான்.

ஆனால், அவன் வருகையை ஒவ்வொரு நாளும் ஊரார் உணர்கின்றனர் என்பதையும், ஆனால் அவன் தோற்றமும், அவன் வரும் முறையும் கண்டு, அவனை ஒரு நாள் அணங்கென்றும், ஒருநாள் களிறென்றும், ஒருநாள் புலியென்றும் பிறழ உணர்ந்து விடுவதால், உண்மை வெளிப்படாது உளது என்பதையும், அவர்கள்ை இவ்வாறே என்றும் ஏமாற்றி விடுதல் இயலாது, ஒருநாள் உண்மை வெளியாகி விடுதல் உறுதி, அவர்கள் அவனைக் கண்டு கொண்டு, அவனோடு தான்் கொண்டுள்ள இக் காதல் ஒழுக்கத்தை உணர்ந்து விடுவாராயின், அவர்கள் முன் தான்் உயிர் வாழ்தல் இயலாது என்பதையும், அப் பெண் உணர்ந்தாள். அதனால், அவள் பெரிதும் வருந்தினாள். அவள் வருத்தம் கண்டு, அவள் தோழியும் வருந்தினாள். அவனும், அவளும் கொண்ட காதல் வளரத் துணை புரிந்தவள் இத் தோழி. அவள், இவ்விடர்ப் பாட்டிற்கு ஒரு முடிவு காணல் வேண்டும் எனக் கருதினாள்.

ஒரு நாள், அவ்வூர் மக்கள் கண்ணிற் படாது வந்து சேர்ந்தான்் அவ்விளைஞன். அவனைக் கண்ட தோழி, அவன்பால், அவன் மறைந்து மறைந்து வருவதையும், அதை ஊரார் அன்றுவரை உணராமையினையும், அவர் உணராமைக்காம் காரணம் இவை என்பதையும் விளங்க உரைத்துவிட்டு, "அன்ப! இவ்வாறே மறைந்து வாழ்தல்