பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ↔ புலவர் கா. கோவிந்தன்

இனியும் இயலாது. உண்மை ஒருநாள் வெளிப்பட்டுவிடும். அந்நிலையில், இக் களவொழுக்கத்தைக் காரணமாகக் கொண்டு, இதுகாறும் எங்கள் முன் நிற்கவும் நானும் இவ்வூரார், அலர் தூற்றித் துயர் விளைக்கத் துணிவர். ஊரில் அலர் எழில், இவள் உயிர் வாழாள்; இவள் நலமே என் நலம். இவள் வாழ்வே, என் வாழ்வு ஆதலின், இவளை இழந்த பின்னர் யானும் உயிர் வாழேன். ஆகவே, அன்ப! இவள் நின்னைப் பலர் அறிய மணந்து கொண்டு, அதனால், அலருரைக்கும் ஊராரை வாயடங்கப் பண்ணி, நின் மனை புகுந்து, நின் சுற்றத்தாரிடையே பெருமித வாழ்வு வாழ வகைபுரியுமாறு, நீ இன்றே மணமுயற்சி மேற் கொள்ளுதல் வேண்டும், வரைந்து கொள்ளுதல் வேண்டும் என யான் வேண்டிக் கொள்வதற்கு, ஊரார் உரைக்கும் அலரை ஒழிக்க வேண்டும் என்பது மட்டும் காரண மாகாது. உங்கள் மணவிழா நாளன்று, எம்மை இதற்கு முன்னர் அறியாத புதியவன் GuTEು நீ நடந்து கொள்வதை .யும், திருமண நிகழ்ச்சியால் பிறந்த நாண் தலைதுாக்கத் தன் இரு கைகளால் தன் முகத்தை மூடிக் கொள்ளும் இவள் அடங்கிய நிலையையும் கண்டு மகிழ்தல் வேண்டும் எனும் என் ஆர்வமும் ஒரு காரணமாம். ஆகவே, அன்ப! இக் களவொழுக்கத்தை இன்றோடு கைவிட்டு, மணந்து மனையறம் மேற்கொள்ளுதற்காம் முயற்சியினை மகிழ்ந்து மேற்கொண்டு, எம் பெற்றோர்.பால் மணம் பேசி, அவர் மகளை வேண்டிப் பெறுவாயாக!” எனக் கூறி அனுப்பி னாள், -

தோழி, அவனுக்குக் கூறிய அக்கூற்றினைப் பொருளாகக் கொண்டு பாடப் பெற்ற அழகிய செய்யுள்

இது: