பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 145

"முறஞ்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலிசெற்று மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல், கூர்நுதி மடுத்து அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள்மருப்பு எழில் யானை,

மல்லரை மறம்சாய்த்த மால்போல் தன்கிளை நாப்பண் 5 கல்லுயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட! கேள்: தாமரைக் கண்ணியைத் தண்நறும் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின், மணம் கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறுTஉம்

அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே, 10 ஈர்ந்தண் ஆடையை, எல்லி மாலையை, சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின், ஒளிதிகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர் களிறு என ஆர்ப்பர்அவ் ஏனல் காவலரே

ஆர மார்பினை, அண்ணலை, அளியை, 15 ஐது அகல் அல்குலாள் செய்குறி நீவரின் கறிவளர் சிலம்பில் வழங்கலானாப் புலி என்று ஒர்க்கும் இக்கலிகேழ் ஊரே,

எனவாங்கு,

விலங்கு ஒரார், மெய் ஒர்ப்பின், இவள் வாழாள்;

- இவளன்றிப் 20 புலம் புகழ் ஒருவ! யானும் வர்ழேன்; அதனால், பொதி அவிழ் வைகறை வந்துநீ குறைகூறி வதுவை அயர்தல் வேண்டுவல்; ஆங்குப் புதுவை போலும் நின் வரவும், இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே.” 20

குறிஞ்சி-10