பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஒ. புலவர் கா. கோவிந்தன்

இரவுக்குறியது ஏதமும் தன் உள்ளத்து விழைவும் கூறித் தோழி, தலைவனை வரைவு கடாயது இது.

உள்ளுறை: செவி மறைப்பப் பாய்ந்த புலி, கள வொழுக்கம் காரணமாக அலர் உரைத்த ஊரார். புலியை யானை வென்றது, மணந்து கொள்வதால், ஊரார் அலரைத் தலைவி அடக்கியது. யானை தன் கிளை நடுவே கலந்து செல்லுதல், தலைவி, மணந்து தலைவன் மனை புகுந்து அவன் சுற்றத்தாரிடையே மகிழ்ந்து வாழ்தலாம்.

1. செற்று-சினந்து, 3. குறங்கு-தொடை, மடுத்து-குத்தி, 4. நிறம்-மார்பு சாடி-திறந்து, 6. நனம்-அகன்ற 11. எல்லி-இருட்டு, மாலை-இயல்பு; எல்லி மாலையை-இருண்ட தன்மை வாய்ந்து அதாவது கருநிறப்போர்வை மேற்கொண்டு;13. ஞெகிழி-தீப்பந்தம்; 17. கறி-மிளகு, 18. ஒர்க்கும்-கருதும், 20. விலங்கு-பிறிது ஒன்றாக, ஓரார்-கருதாராய்: 21. புலம்புகழ் ஒருவ-அறிவால் புகழப்படும் ஒப்பற்றவனே:22. பொதி அவிழ்-அரும்புகள் மலர்கின்ற.