பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

கண்டாள் கவின் பெற்றாள்

வளம்மிக்க ஒரு மலைநாடு. அந்நாட்டிடை நின்ற மலையொன்று, வானுற ஓங்கி வளர்ந்திருந்தது. அதனால், மழைதரும் மேகங்கள், அதன் உச்சியில் என்றும் படிந்து கிடக்கும். மழைதரு மேகங்கள் உண்மையால், அம்மலையி னின்றும் பிறந்து ஒடும் அருவிகள் எல்லாம், பேரொளி எழப் பெருக்கெடுத்தோடும். அதனால், அவ்வருவிகள் பாயும் இடங்களில் உள்ள பள்ளங்களெல்லாம் நீர் நிறைந்து வழியும். அவை என்றும் நீர் அறாமையால், ஆங்குக் காந்தட் செடிகள், நாள்தோறும் புதிய புதிய அரும்புகளை விட்டு அணி செய்யும். மழை பெறாது வறுமையுறுதலை அறியாத அந்நாட்டில், சுரபுன்னை மரங்கள் வளர்ந்த மலைச் சாரலில் தான்் விரும்பும் பெண் யானை தன்பால் இருக்கக் கண்டு, அதன் மீது கொண்ட ஆசையால் தன்மீது பகை கொண்ட பிறிதொரு வேழத்தைத் தன் கோடுகளால் அதன் நுதலைக் குத்திப் பிளந்து கொன்றது ஒரு களிறு, அவ்வாறு குத்தி வாங்கிய