பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஜ் புலவர் கா. கோவிந்தன்

அக்களிற்றின் கோடுகள், செந்நீர் படியச் சிவந்து தோன்று வதைப் போல், காட்சி தரும் அக்காந்தள் மலர்க் காட்சி, கண் கொள்ளாக் காட்சியாம்!

அத்தகைய வளமிக்க மலைநாட்டில் வாழ்வானோர் இளைஞன், ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண் டான். அவளும், அவனைக் காதலித்தாள். பிறர் அறியா வாறு அவளை மணந்துகொண்டான். மணந்து அவளுக்கு மகிழ்ச்சி அளித்தான்். தான்ும் மகிழ்ந்தான்். "இம் மகிழ்ச்சி கெட்டு விடுமோ? அவன் மறந்து விடுவானோ?” என அவள் அஞ்சியவிடத்து, "உன்னைப் பிரியேன்; பிரியின் உயிர் வாழேன்!” என ஆணையிட்டுக் கூறி அவளைத் தேற்றினான். அவ்வாறு தேற்றியவன், இடையே, ஒரு சில நாட்கள் அவளைக் காண வந்திலன். அதனால், அவள் துயர் உற்றாள். பிரிவுத் துயர் அளவிலதாயிற்று. மனத்துயர் மிகுதியால், அவள் உடல் நலனும் கெட்டது. அவள் தோள்கள் தளர்ந்தன. அதனால், அவள் கைவளைகள் தாமாகவே கழன்று விழத் தொடங்கின. கயல்மீன் போலும் அவள் கண்கள், அக்கயல்கள், உணவுண்ணுங் கால் தாம் உண்ட நீரைப் பின்னர் உமிழ்தல்போல், இடை யறாது நீர் சொரியத் தொடங்கின. அவள் உடல் தன் பண்டைய ஒளி கெட்டது. பீர்க்கம் பூப்போலும் பொன்னிறப் பசலை படர்ந்து பொலிவிழந்தது. பகற்காலத் தில், தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சிகளாலும், காணும் காட்சிகளாலும், தன் துயரை ஒருவாறு மறத்தல் இயலு மேனும், ஒவ்வோர் இரவிலும் காதலனைக் கனவிற்கண்டு கலங்கினாளாதலின். அவள் துயர் குறைதற்கு மாறாக அளவின்றி வளர்ந்தது. -