பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 149

தன் மகள்பால் காணலான இம்மாற்றம் கண்ட தாய் அவள் நோய், தெய்வம் தந்தது எனக் கொண்டு, அது போக, அத்தெய்வத்தை வழிபடத் தொடங்கினாள். தெய்வ வழிபாட்டிற்குப் பின்னரும் அவள் நோய் தணியாமை கண்ட ஊரார், அவள் ஒழுக்கம் குறித்து அலர் உரைக்கத் தொடங்கினர். அதனால், அவள் துயர் மேலும் மிக்கது. இவ்வாறே செல்லவிடின் அவள் உயிர் வாழாள். அந்நிலை யினை உணர்ந்த அவள் உயிர்த்தோழி, அவள் காதலனைக் கண்டு, அவள் துயர்நிலை கூறி, அதைப் போக்கி அவள் நலம் மிகத் துணை செய்யும், பிரியாமைக்கு வழி செய்யும் வரைவினை மேற்கொள்ளுமாறு வேண்டுதல் வேண்டும் எனக் கருதினாள். சின்னாட் கழித்து அவ்விளைஞன் ஆங்கு வந்தான்். வந்தான்ைத் தோழி கண்டு, அவன் காதலியின் நிலையினை அவனுக்கு எடுத்துரைத்தாள். அப்போது, அவ்விருவர்க்கிடையே கீழ்க்கண்ட உரையாடல் இடம் பெற்றது:

இளைஞன் வருத்தம் மிகுதியால் வாட்டம் உற்றாள். வளை கழன்றது. வளை கழலவே, இவள் தளர்ச்சியைத் தாய் உணர்ந்தாள் எனக் கூறுகின்றனையே. கழலும் வளைகளைக் கையிலே சிறிது மேலேற்றிச் செறித்துவிடின், அவள் தளர்ச்சியை மறைத்திருத்தல் இயலாதோ?

தோழி: அன்ப! அவள் கைவளைகளைக் கழலாமல் மேலேற்றிச் செறித்து விடலாம். ஆனால், அதனால் பயனில்லையே. அவள் கண்கள்தாம் நீர் சொரியத் தொடங்கி விட்டனவே. கைவளைகளைச் செறிப்பது போல் கண்ணிரைத் தடுத்தல் எம் வசம் இல்லையே! அதற்கு யாம் என் செய்வோம்?