பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 & புலவர் கா. கோவிந்தன்

இளைஞன்: "அவள் உடல் தளர்ந்து விட்டதாயினும், அதைக் கொண்டு தெய்வத்தை வழிபட வேண்டுமோ? தெய்வத்தை வழிபட்டதாலன்றோ, ஊரார் இவள் கள வொழுக்கத்தை உணர்ந்தனர். தளர்ச்சிக்கு வேறு காரணம் கற்பித்துக் கூறித் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளா வாறு தாயைத் தடுத்திருத்தல் கூடாதோ?

தோழி: அன்ப! தெய்வ வழிபாட்டை மேற் கொள்ளாவாறு தாயைத் தடுத்திருத்தல் இயலும். ஆனால், அதைச் செய்து விடுவதால் மட்டும், இவள் ஒழுக்கம் ஊரார்க்குத் தெரியாதிருந்து விடாது. இவள் நெற்றி, பிறை போலும் தன் பண்டை அழகிழந்து பீர்க்கம்பூ நிறம் போலப் பசலை பெற்று விட்டதே. அதற்கு யாம் என் செய்வோம்? அந்நெற்றிப் பசலை, இவள் ஒழுக்கத்தை ஊரார்க்குப் பறை சாற்றியன்றோ உரைக்கத் தொடங்கி விட்டது! இந்நிலையில் தெய்வ வழிபாட்டைத் தடுப்பதால், யாது பயன்?

இளைஞன். யான் சிறிது அலுவல் மிகுதியால் வாராதேனாயினேன். அதற்காக அதையே எண்ணி எண்ணித் துயர் உறல் வேண்டுமோ? வேறு வினைமீது சென்ற சிந்தனையால், உங்களை நான் சிறிதே மறந்தி ருந்தது போல், நீங்களும் என்னைச் சிறிதே மறந்து, மனந்தேறியிருத்தல் கூடாதோ?

தோழி: அன்ப! அவ்வாறு மறந்திருத்தல் எம்மாலும் இயலும். ஆனால், இரவில் தனித்திருக்கும் இவளை, நின்னைப் பற்றிய எண்ணங்கள், கனவில் வந்து மருட்ட ஒரு நாளும் தவறிற்றிலதே. அதற்கு யாம் என் செய்வோம்.