பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 151

ஒவ்வோர் இரவிலும், கனவில் நின்னைக் கண்டு துயர் உறும் நாங்கள், பகற்காலத்தில் மறந்திருத்தல் எவ்வாறு இயலும்?

இவ்வுரையாடலின் பயனாய் வாயடைத்து நின்ற அவன், அந்நிலையில் ஆங்கு வந்த தன் காதலி, தோழி கூறிய தளர்ச்சியேதும் இன்றிப், பண்டு தான்் கண்ட பேரழகோடு தோன்றக் கண்டு, தோழியை நோக்கி, "ஆமாம், இவள் இவ்வாறு வருந்தினாள். தோள் தளர்ந்தது. வளை கழன்றன, கண்ணிர் சொரிந்தாள். பசலையூத்தது இவள் மேனி! என்றெல்லாம் கூறினையே, இதோ பார், இவள்பால் நீ கூறிய குறையேதும் இல்லாதிருப்பதை! நீ இவ்வளவு நேரம் கூறியன பொய்யன்றோ?' என்றான்.

அதுகேட்ட தோழி, "அன்ப! நின் நாட்டில் வளரும் தினை, மழை பெறாது வறட்சி உற்ற காலத்தில் அது காட்டும் வாடிய நிலையினை, அது பெருமழை பெற்று வளமுற வளர்ந்திருக்கும் காலத்தில் அது காட்டும் கவின் மிகு காட்சியை மட்டும் கண்டவர் அறிவரோ? அது முளை விட்டெழுந்து வளரத் தொடங்கிய காலம் முதல், அது வளர்ந்து பயன் அளிக்கும் காலம்வரை, அதன் உடன் இருந்து பேணி வளர்ப்பவர் அன்றோ, அதன் வாடிய நிலையினைக் கண்டு வருந்தியிருப்பர். அதைப் போல், நின் அன்பைப் பெற்ற அந்நிலையே, தன் தளர்ச்சியெல்லாம் அகல, வனப்புற்று விளங்கும் இயல்புடையளாய இவள், நின் அன்பைப் பெறாத காலத்தில், எவ்வாறு வாடி வனப்பு இழப்பள் என்பதை, நீ அறிந்து கொள்ளுதல் இயலாது. அதை அறிதல், அவள் பிறந்த நாள் தொட்டு