பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இ புலவர் கா. கோவிந்தன்

அவளுடன் இருந்து, அவள் நலம் பேணும் என்னால் மட்டுமே இயலும்!” எனக் கூறி வழியனுப்பினாள்.

தோழிக்கும் அவ்விளைஞனுக்குமிடையே நடை பெற்ற அவ்வுரையாடலை, உணர்ச்சியோடு எடுத்துரைக் கிறது இச்செய்யுள்: "வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல் விறல்மலை வியல் அறை வீழ்பிடி உழையதா மறம்மிகு வேழந்தன் மாறுகொள் மைந்தினால் புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல

உயர்முகை நறுங்காந்தள் நாள்தோறும் புதிதுஈன, 5 அயம் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும் பயமழை தலைஇய பாடுசால் விறல் வெற்ப! மறையினில் மணந்து ஆங்கே மருவறத் துறந்தபின் இறைவளை நெகிழ்பு ஒட ஏற்பவும் ஒல்லும் மன் அயல் அலர் தூற்றலின் ஆய்நலன் இழந்த கண் 10 கயல் உமிழ் நீர் போலக் கண்பனி கலுழாக்கால்; இனிய செய்து அகன்றுநீ இன்னாதாத் துறத்தலின், பனி இவள் படர் எனப் பரவாமை ஒல்லும் மன்; ஊர் அலர் தூற்றலின் ஒளிஓடி, நறுநுதல் பிர்அலர் அணிகொண்டு பிறைவனப்பு இழவாக்கால், அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின், நெஞ்சழி துயர் அட நிறுப்பவும் இயையும் மன்; நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர், கனவினால் அழிவுற்றுக் கங்குலும் ஆற்றாக்கால்;

எனவாங்கு, o விளியா நோய் உழந்து ஆன என் தோழி நின்மலை 20