பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 153

முளிவுற வருந்திய முளைமுதிர் சிறுதினை தளிபெறத் தகை பெற்றாங்கு, நின் அளிபெற நந்தும் இவள் ஆய்நுதற் கவினே.”

தோழி, தலைவியது ஆற்றாமையும், ஆற்றுவித்தல் அருமையும் கூறி வரைவு கடாயது இச்செய்யுள்.

உள்ளுறை மணம் நாறும் காந்தள், கொடிய கோடு போல் தோன்றல், நல்லோனாய தலைவன், வரைந்து கொள்ளாமையால் கொடியன்போல் தோன்றலாம். பள்ளங்கள் நீர் நிறைந்து அழகு பெறுமாறு அருவிகள் பெருக்கெடுத்து ஓடி வருவதற்குக் காரணமான மழை, அயலார் வாயில் அலர் எழுமாறு அவன் தந்து செல்லற்காம் அவன் பேரன்பாம்.

1. வறன் உறல்-மழைஇன்றி வாடுதல்; வாழை-சுரபுன்னை, 2. விறல்-சிறப்பு: வியல்-அகன்ற, அறை-பாறை, வீழ்பிடி-தான்் விரும்பும் பெண்யானை, உழை-பக்கம், 3. மைந்து-பலம், 4. புய்கோடு-பிடுங்கிய கொம்பு, 5. முகை-அரும்பு, 6. அயம்-பள்ளம், நந்தி-நீர்நிறைந்து, 7. பயமழை-பயன்மிக்க மழை, தலைஇயஉச்சியிற் கொண்ட 8. மறை-களவொழுக்கம்; மருவுதல்-கூடுதல்; அற-நீங்குமாறு, 9. இறை-முன்கை, நெகிழ்பு-கழன்று, ஒல்லும்இயலும், மன்-அசை பயன் இல்லாமையால் அது இயலாதாயிற்று எனும் பொருள் தரும், 13. பனி-நோய், படர்-நோய், பரவுதல்-வழி படுதல்; 14. ஒளிஓடி-ஒளிகெட்டு; 15. பீர் அலர்-பீர்க்கமலர், 17. அட-வருத்த நிறுப்பவும்-உயிரைப் போக்காது நிறுத்தவும், 18, நலிதந்த-வருத்திய, விளியாநோய்-அழைக்காமல் தான்ேவந்த காதல் நோய்; 22. முனிவுற-உலர்ந்து போம்படி 23. தளி-மழைத் துளி, தகை-அழகு 24. நந்தும்-பெருகும்.