பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 155

அஞ்சினான். அந்நிலையில் அவளும் அவனைக் கண்டாள். அவள் தன்பால் காட்டும் காதலுணர்ச்சியை அவன் கண் காட்டக் கண்டு கொண்டாள். அவளும் அவனைக் காதலித்தாள்.

அவள் உள்ள நெகிழ்ச்சியை அவள் கண்கள் உணர்த்தி விட்டன. தான்் அவளைக் காதலிப்பது போன்றே, அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட அவன், துணிந்து முன்வந்து அவளை அணைத்துக் கொண்டான். அவனை அவள் காதலித் தாளாயினும், பண்டறியாத ஒருவன் தன்னைப் பற்றிக் கொண்டதை அவள் பெண்ணுள்ளம் தாங்காதாயிற்று. அவனைக் காண வேண்டும் எனும் வேட்கையினும், அயலான் ஒருவன் அணைப்பில் கிடத்தல் தன் பெண்மைக்கு ஏலாதே என்ற எண்ணத்தாற் பிறந்த மனக் கலக்கம் மிகப் பெரிதாயிற்று. அவள் உள்ளக் கலக்கத்தால், அவள் உடலும் சிறிதே நடுங்கிற்று. - -

அவள் மனத்தடுமாற்றத்தை அவன் அறிந்து கொண் டான். அதனால், அவளை நோக்கி, "நின்பேரழகால், நின் பெண்மை நலத்தால், செயலற்றேன் நான். நின்பால் அன்பு கொண்டேன். நின் அன்பிற்கு அடிபணிந்து வாழ்வ தல்லது பிற எதையும் அறியேனாயினேன். இந்நிலையினை ஏற்றுக் கொண்டு அருள் புரியாது அஞ்சி அகலல் நினக்கு ஏற்புடையதாமோ?” என உரைத்துக் கொண்டே, அவள் கூந்தலிற் கிடந்து தொங்கும் மாலையுள் ஒரு வடத்தைப் பற்றித் தன் விரல்களிற் சுற்றிப் பிடித்து அம்மலர் மணத்தை நுகர்ந்தான்். அகல மலர்ந்த நரவம்பூப் போன்ற மெல்லிய விரல்களைக் கொண்ட அவள் அழகிய கையை,