பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tö5 象 புலவர் கா. கோவிந்தன்

அருளொளி வீசும் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு நெடுமூச்செறிந்தான்். காமவெறி கொண்ட களிறு ஒன்று, அக்காம மயக்கத்தால், தான்் விரும்பும் பிடியானையின் உடலெல்லாம் தடவி மகிழ்தல் போல். அவள் மேனி முழுவதையும் தன் கைகளால் தடவிக் கொடுத்தான்். அவன் செய் இச்செய்கைகளால், அவள் கலக்கம் சிறிது சிறிதாக மறைந்தது. அவனோடு மகிழ்ந்துறைவதை, மனம் நிறை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாள். அன்று தொடங்கி, அவர்கள் இருவரும், பிறர் அறியாவாறு, கண்டு கலந்து மகிழ்ந்து வந்தனர்.

அந்நிலையில், அவளை மணம் டேச அயலார் சிலர் அவள் வீட்டிற்கு வந்தனர். அச் செய்தி கேட்ட அவள் தான்் ஒருவனைக் காதலித்திருப்பதை அறியாத தன் பெற்றோர், தன்னை அவ்வயலாற்கு மணம் செய்துதர இசைந்து விடுவரோ? அதனால் தன் கற்பிற்குக் கேடுண்டாய் விடுமோ? என நடுங்கினாள். அந்நடுக்கம், அவள் பெண்மையொழுக்கத்தையும் ஒரு சிறிது தகர்த்தது. தன் இன்ப துன்பங்களிற் பங்குகொள்ளும் பெருங்குணம் படைத்தவளாய தன் தோழியிடம் ஓடினாள். தன் நாணை மறந்து, அவள்பால், தனக்கும் அவ்விளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பை விளங்க எடுத்துக் கூறி, "நாளை நடைபெறப் போகும் திருமணம் எனக்கும் அவ் விளைஞனுக்குமேயாதல் வேண்டும். அதற்கு நின் துணை யல்லது வேறறியேன். நம் தாய்க்கும் தமர்க்கும் இதை எடுத்துக் கூறி, அதற்கு ஆவன, உடனே மேற்கொள்ள நின்னை வேண்டுகிறேன். இதை முடித்துத் துணை புரிவாயேல். தான்் விரும்பிய காதலனையே மணந்து தன்