பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 157

கற்பினைக் காத்துக் கொண்டாள் இவள்! என என்னை நோக்கியும், அவள் கற்பு நெறி கெடாவாறு, உற்றது உரைத்து உறுதுணை புரிந்தாள் இவள்! என நின்னைப் பற்றியும், இவ்வூரும் உலகமும் உரைக்கும் புகழுரை நிலையற்ற இவ்வுலகில் என்றும் நிலைத்து வாழும். ஆகவே அதை இன்றே புரிக இன்றேல், இவ்வுலகம் நிலையற்றது என்பதை அறிந்த யான், நிலையற்ற இவ்வுடலைத் தாங்கிக் 'கற்பு நெறி கெட்டாள் என உலகம் உரைக்கும் நிலைத்த பழியை மேற்கொள்ளேன்!” எனக் கூறினாள். அப்பெண் அவள் தோழிபால் உரைத்த, அவளின் காதல் தோன்றி வளர்ந்த வரலாற்றினையும், அவள் அவள்பால் விடுத்த வேண்டுகோளையும் விளங்க உரைக்கிறது இச் செய்யுள்.

“கொடியவும் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடிஅழல் புறந்தந்த பூவாப்பூம் பொலன் கோதைத் தொடிசெறி யாப்பு அமை அரிமுன்கை, அணைத்தோளாய்! அடியுறை அருளாமை ஒத்ததோ நினக்கு? என்ன,

நரந்தம்நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் 5 பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம் பெறச் சுற்றிய குரலமை ஒருகாழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்; நறாஅ அவிழ்ந்தன்ன என்மெல் விரற்போது கொண்டு

செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்; தொய்யில் இளமுலை இனிய தைவந்து தொய்யலம் தடக்கையின் வீழ்பிடி அளிக்கும் மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்;