பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஆ. புலவர் கா. கோவிந்தன்

அதனால், - 15

அல்லல் களைந்தனன்; தோழி! நம்நகர் அருங்கடி நீவாமை கூறின் நன்று என நின்னொடு சூழ்வல் தோழி! நயம் புரிந்து 'இன்னது செய்தாள் இவள் என மன்னா உலகத்து மன்னுவது புரைமே.” 20

வேற்று வரைவு வரக்கண்ட தலைவி, தோழிக்கு, இன்னவாறு கூட்டம் நிகழ்ந்தது எனக் கூறி, அதனை நமர் அறியக் கூறல் வேண்டும் என வேண்டிக் கொண்டது இச் செய்யுள். விதி: தொல்: களவு: 20,21. >

1. நீர்இன்றி நிறம்பெற-பொன்னாற் செய்த பூவாதலின் நீரின்றியே நிறம் பெற்றது. 2. பொடி அழல்-நீறு மண்டிய நெருப்பு: புறந்தந்த-பண்ணிய, பூவாப்பூ-செய்த பூவாதலின் பூவாதபூ எனப்பட்டது. 3. யாப்பு-வளையல்களைச் சேர்த்துப் பிணிக்கும் கட்டுவடம், 4. அடிஉறை-அடியின் கண் கிடந்து வாழ்தல்; 5. நரந்தம்-கத்துரி, 6. பொலம்-பொன்; மகரவாய்-மீன்வாய் போல் பண்ணிய தலையணி, நுங்கிய-விழுங்கிய, 7. காழ்-வடம்; 9. நறா-நரவ மலர்; 10. செறா அச்செங்கண்-சினவாத கண்; அருள் புரியும் கண்; 11. பறா அக்குருகு-பறவாக் குருகு, அதாவது கொல்லன் உலைக்கண் உள்ள துருத்தி, 17. கடி-திருமணம்; நீவாமை-நீங்காமல்; அவனை விட்டு நீங்காமல்; 18. நயம் புரிந்து-கற்பு நெறிநிற்கும் நல்லதையே விரும்பி, 20. மன்னா-நிலை யற்ற, புரைமே-புரையுமே என்பது புரைமே என வந்துளது; பொருந்தும் என்பது பொருள். - *