பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

يعين

யானை அனையன்!

மூன்றாம் பிறைபோல் வளைந்து சிறுத்து ஒளிவீசும் நெற்றி, மறுவற்ற முழுத் திங்கள் போல் அகன்று பேரொளி வீசும் முகம். மலைவளர் மூங்கிலின் பருமையும் மென்மை யும் வாய்ந்த தோள்கள். நீர் நிறைந்த சுனையில் நின்று மலரும் நீலோற்பலத்தை நிகர்த்த கருநீல விழிகள். மயிலின் நடை போன்ற சாயல், கிளிமொழி போலும் இனிய சொற்கள். இத்தகு நலமுடையாள் ஒரு பெண், மலைச் சாரலையடுத்துத் தன் தந்தை உழுது விளைத்த தினைக் கொல்லையில் காவல் மேற்கொண்டிருந்தாள்.

வேட்டையாடும் விருப்பம் உடையனாய், அக் காட்டுட் புகுந்த அயலூர் இளைஞன் ஒருவன், அவள் ஆங்குத் தனித்திருக்கக் கண்டான். அவள் பேரழகிற்கு அடிமையாகி, அவளைக் காதலித்தான்். காதல் மிகுதியால், தான்ோர் இளைஞன், முன்னிற்பாள் ஒர் இளம் பெண், தன்னோடு தொடர்பேதும் இலாதவள், அவளோடு,