பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ↔ புலவர் கா. கோவிந்தன்

அந்நிலையில், ஆங்கு நிற்றல் அறிவுடைமையாகாது என உணரும் உணர்வையும் இழந்து விட்டான். அதனால் அவள் அழகைக் கண்டு மகிழ்ந்ததோடன்றி, வாய்விட்டுப் பாராட்டி வாழ்த்தவும் தொடங்கி விட்டான். தன் புனத் தருகே அயலான் ஒர் இளைஞன் நிற்பதையும், அவன் தன்னையே நோக்குவதையும் கண்ட அப்பெண், நாணி, அவ்விடம் விட்டு அகலத் தொடங்கினாள்.

அவ்வாறு செல்வாளை, அவ்விளைஞன், "யாண்டும் செல்லற்க. ஈண்டே நிற்க!” எனக்கூறி நிறுத்தினான். பின்னர் அவள் அண்மையிற் சென்று நின்று, "நெற்றி பிறர் கண்டு வியக்குமளவு தேய்ந்து ஒளி வீசுகிறது. ஆனால், மூன்றாம் பிறைத் திங்களோ என்று நோக்கினால், அன்று. முகம், களங்கமற்றுக் காட்சி அளிக்கிறது. ஆனால் முழுநிலாத் திங்களோ என்றால், அன்று. தோள்கள் பருமையும், பெருமையும் உடையன. ஆனால், மலையிடத்து வளரும் மூங்கிலோ என்றால், அன்று. கண்கள் நீரும் நீலநிறமும் பெற்றுச் சுடர் வீசுகின்றன. ஆனால், சுனையிடத்து மலரும் கருநீல மலரோ என்றால், அன்று. பையப் பைய அடி யெடுத்து வைக்கும் நடையின் அழகே அழகு! ஆனால், சாயலிற் சிறந்த மயிலோ என்றால், அன்று. வாயினின்றும் வெளியாம் ஒவ்வொரு சொல்லும், என் உள்ள உரத்தைத் தகர்த்தெறியும் சுவை மிக்கதாம். ஆனால், இனிய சொல் வழங்கும் கிளியோ என்றால், அன்று!” என்பன போலப் பலப்பல கூறிப் பாராட்டினான்.

இவ்வாறு பாராட்டிய அவன், அப் பாராட்டிற் கிடையே, வலைவீசிக் காட்டு விலங்குகளைக் கைப்பற்றும்