பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 161

கானவர், அவ் விலங்குகள் சோர்ந்து வீழும் நிலையை ஆர்வத்தோடு எதிர்நோக்கி நிற்றல் போல், அவனைக் கண்டும், அவன் சொற் கேட்டும், அவன்மீது காதல் கொண்டு, அவள் கருத்திழக்கும் நிலையை ஆர்வத்தோடு எதிர் நோக்கினான். அதற்கேற்ப அவள் உள்ளமும் நெகிழ்ந்தது. அவன் அன்பிற்கு அவளும் அடிபணிந்து விட்டாள். காதலுணர்வு அவள் கருத்திலும் வேரூன்றி வளரத் தொடங்கி விட்டது. அவள் அக நெகிழ்ச்சியை, அவள் கண்கள் அவனுக்கு அறிவித்து விட்டன. அதை அவன் கண்டு கொண்டான். உடனே, கொலையஞ்சாப் புலையர், தம் கைப்பட்ட விலங்குகளைக் கொல்லும் ஆர்வம் வழியத் தோன்றுவது போல், அவளைக் காதல் உணர்வு வருத்த நோக்கிக் கொண்டே, அவள் அணித்தே சென்றான். சென்று அவளைத் தொழுதான்். அம்மட்டோ! அவளைப் பற்றி அணைத்துக் கொள்ளவும் செய்தான்். ஒருமுறை, இருமுறையன்று, மதம் மிக்குக் கட்டுக் கடங்காது திரியும் களிறே போல், காதலாற் கருத்திழந்த அவன், அவளைப் பலகால் தொழுதான்். பல முறை அனைத்துக் கொண்டான்.

அறிவிழந்து அவன் அவ்வாறு செய்யினும், அவள் அசைவற்றே நின்றாள். அவன்மீது அவள் காதல் கொண்டாளாயினும், நானும், மடனும் முதலாம் பெண்மைக் குணங்கள், அவளை விட்டு நீங்காமையால், அவன் பாராட்டையும் பணிதலையும் ஒரு சிறிதே வெறுப்பாள் போன்றே காணப்பட்டாள்.

அன்று தொடங்கிய அவர்கள் காதல் தொடர்பு, தொடர்ந்து வளரலாயிற்று. ஆனால், அப்பெண்

குறிஞ்சி-11