பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ல் புலவர் கா. கோவிந்தன்

எப்போதும் தனித்திராள். அவளை வளர்த்த செவிலித் தாயின் மகளாய்ப் பிறந்து, அவள் நலம் பேணி, அவளைப் பிரியாதிருக்கும் தோழி ஒருத்தி, எப்போதும் அவளுட னேயே இருப்பள். அத் தோழியின் துணையின்றி அவளைக் காண்பது அரிதாம். இதை, அவள் குறிப்பாக அவனுக்கு அறிவித்தாள். அதை அறிந்து கொண்ட அவனும், அதனால், அத்தோழி தனித்திருக்கும் சமயம் நோக்கிப் பலநாட் பலமுறை சென்று, தனக்கும் அவள் ஆருயிர்த் தோழிக்கும் உண்டான அன்பின் தொடர் பினை அறிவித்து, அவளைக் கண்டு மகிழ, அவள் துணையை வேண்டினான். தோழியும், அவன் பிறப்பும் நிலையும் ஆராய்ந்து, அவற்றால் அவன் நல்லனாதல் அறிந்து, அவன் குறைபோக்கித் துணை புரிய வாக்களித் தாள். அவ்வாறு வாக்களித்தவள், அப் பெண்ணின்பால் சென்று தனக்குத் தெரியாது என அவள் கருதும் அவள் காதல் ஒழுக்கத்தைத் தான்் அறிந்து கொண்டதையும், அவள் காதலன், அவளைக் காணமாட்டாது வருந்தும் கொடுமையினையும் கூறி, அவனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள்.

தன்முன் நிற்கும் தோழியை அப்பெண் கண்டாள். கருமேகத்திடையே தோன்றும் மின்னற்கொடிகள் போல், பொன்னால், பல பிரிவு தோன்றப் பண்ணிய தலைக் கோலங்கள் கருநிறக் கூந்தலிற் கிடந்து அணி செய்ய, தாழம்பூ இதழ்களை இடையிடையே வைத்துத் தொடுக்கப் பெற்ற மாலையும், இளம் முறுவலும், வெண் பல்லும், இன்சொல்லும், பவளம் போற் சிவந்த வாயும், பிறைபோல் ஒளிவீசும் துதலும் அழகு செய்யாநிற்கும் அவள் நலனைப் பாராட்டினாள். பின்னர் தன்னை அவன்கண்டு, காதல்