பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பற்றாது விடாது

வீட்டை மறந்து, வெளியிலே திரிந்து விளையாடும் பருவத்தினளாய ஓர் இளம் பெண், கண்டார் மயங்கும் கவின் உடையளாதல் கண்டு காதல் கொண்டான் ஓர் இளைஞன். கண்ட மகளிர்மீது ஆசைகொள்ளும் காமுகன் அல்லன் அவன். கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றவன். கற்ற அந்நூல்கள் கூறும் ஒழுக்க நெறி நிற்கும் உரவோன். செல்வ வாழ்வுடையான். சிறந்த ஆண்மை யாளன். இவ்வாறே, எல்லா வகையாலும், பிறர்க்கு எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல உயர்ந்தோன். அத்தகை யான் அப் பெண்மீது காதல் கொண்டான். காதல் உணர்ச்சியினை அறிந்து கொள்ளாக் கன்னிப் பருவத்தள் அவள் என்பதை அவன் அறிவான். அறிந்தும் அவளைக் காதலித்தான்். அவள் அழகு அத்துணை ஆற்றல் வாய்ந்த பேரழகு. அதனால், அவள் பேரழகிற்கு அவன் அடிமையாகி அவள் செல்லும் இடந்தோறும், அவள்பின்