பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 181

இடைநில்லாது எய்க்கும் நின்உருவறிந்து அணிந்துதம் உடைமையால் போத்தந்த நூமர்தவறு இல்லென்பாய்?

அல்லல்கூர்ந்து அழிவுற அணங்காகி அடரும்நோய், 15 சொல்லினும் அறியாதாய்! நின்தவறு இல்லானும், ஒல்லையே உயிர்வெளவும் உருவறிந்து அணிந்துதம் செல்வத்தால் போத்தந்த நூமர்தவறு இல்லென்பாய்?

எனவாங்கு, ஒறுப்பின், யான்ஒறுப்பதுநூமரை! யான் மற்றுஇந்நோய் 20 பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்! மறுத்துஇவ்வூர் மன்றத்து மடல்ஏறி, நிறுக்குவென் போல்வல்யான் நீ படுபழியே!”

இதுவும் கைக்கிளை விதி: தொல்: பொருள்: 50

1. இறை- முன்கை, 2. பிணை - பெண்மான்;3. கார்- மழை, எதிர்- பெற்ற;4. புரையும் - ஒக்கும். நுசுப்பு- இடை, 7. உயவுநோய் - காமநோய், கைம்மிக-அளவின்றிப் பெருக, 8. இல்லானும் - இல்லையாயினும் என விரிக்க,9. அறிந்து- அறிந்தும் என உம்மை கொடுத்து விரிக்க; 10. போத்தந்த - அனுப்பிய, 11. நடை - அறிவு, ஒழுக்கம் முதலாயின; 13. எய்க்கும் - இளைக்கும், தளரும், 17. 'ஒல்லையே - விரைவாக, 20. ஒறுப்பின் - தண்டிப்பின், 21. மடல் - தான்் விரும்பிய பெண்ணைப் பெறுதற் பொருட்டு, பனைமடலால் குதிரை செய்து அதன்மீது, நீறுபூசி, எருக்கம்பூ மாலை அணிந்து, தன் காதலியின் உருவம் எழுதிய படம் கையேந்தி அமர்ந்து, ஊர்ச்சிறுவர் ஈர்த்து வந்துவிட, அப்பெண்ணின் ஊர்ப்பொதுவிடத்தே இருத்தல். அது கண்டு, அவ்வூர்ப் பெரியவர், அவன் குறை கேட்டறிந்து இரங்கி, அவளை அவனுக்கு மணம் முடிப்பர்.