பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ல் புலவர் கா. கோவிந்தன்

கொள்ளுதற் பொருட்டு, என் குறையை, உன் ஊர்வாழ் பெரியோர்க்கு அறிவிக்கும் வழியாகப் பனைமடலால் ஆய குதிரைமீது இவர்ந்து வந்து, உன் ஊர் மன்றத்தே இருந்து உயிர் விடுவன். ஆகவே, இவ்வாறு செய்தான்் இவன்! எனப் பின்னர் என்மீது குறை கூறாது என்னை இன்றே ஆட்கொள்வாயாக! என் அன்பை ஏற்றுக் கொள்வாயாக!” என்றெல்லாம் கூறினான்.

அவன் அவ்வளவு கூறியும், அதை அவள் அறிந்தா ளல்லள். அவன் கூறிய சொல்லின் பொருளறியாப் பருவத்து மெல்லியலாள் அவள். அவள் அன்னள் என்பதை அறிந்தும், அவள் பேரழகைக் கண்டு, காதல் கொண்டு கருத்திழந்தான்் அவன். அக்கருத்திழந்தவன் கூறிய, காதற் சுடர்வீசும் சொல்லோவியம் இச்செய்யுள்.

"வார்உறு வனர்ஐம்பால், வணங்குஇறை நெடுமென்தோள்; பேரெழில் மலர்உண்கண்; பிணைஎழில் மான்நோக்கின்; கார்எதிர் தளிர்மேனி, கவின்பெறு சுடர்நுதல், கூர்எயிற்று முகை வெண்பல்; கொடிபுரையும் நுசுப்பினாய்!

நேர்சிலம்பு அரியார்ப்ப, நிரைதொடிக்கை வீசினை, 5 ஆருயிர் வெளவிக்கொண்டு அறிந்துஈயாது இறப்பாய்கேள் உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக, இளமையான் உணராதாய்! நின்தவறு இல்லானும், களைநர்இல் நோய்செய்யும் கவின் அறிந்து அணிந்துதம்

வளமையால் போத்தந்த நூமர்தவறு இல்லென்பாய்? 10 நடைமெலிந்து அயர்வுறீஇ நாளும்என் நலியும்நோய் மடமையான் உணராதாய்! நின்தவறு இல்லானும்