பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஆ 179

உயர்ந்த அணிபல அணிவித்தும் மேலும் அழகுடைய ளாக்கி வெளியே உலாவ அனுப்பிய உன் பெற்றோர் மீதும் குற்றம் இல்லை எனக் கூறுவையாயின், அதை யான் ஏற்றுக் கொள்ளேன்.

"உன் காதல் நினைவால் உள்ளம் அழிந்து, நான் வருந்துகிறேன். அவ்வருத்தம் நாள்தோறும் வளர்ந்து கொண்டேயுளது. அதை நீ அறிந்திலை. பலமுறை உனக்கு எடுத்துக் கூறினேன். அப்போதும் நீ அறிந்து கொண்டா யில்லை. அதை அறிந்து கொள்ளும் அறிவு இன்னமும் வாய்க்கப் பெறவில்லையே! அதற்கு யான் என் செய்வேன்? எனக் கூறி நின் அறியாமைக்கு, இன்மையைக் காரணம் காட்டி, நீ தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் காண்பார் உயிரைக் கண்ட அப்போதே கவர்ந்து கொள்ள வல்லது நின் காட்சியழகு என்பதை அறிந்தும், தம் செல்வ மிகுதியால், அழகிற்கு அழகு செய்யும் அறியாதார் செயல் போல், நின்னை ஆடை அணிகளால் மேலும் அழகுடைய வளாக்கி அனுப்பிய நின் பெற்றோர் மீதும் குற்றம் இல்லை எனக் கூறுவையோ? அவ்வாறு நீ கூறினும், அதை யான் எவ்விதம் ஏற்றுக் கொள்வேன்?

& 4

ஆக, நான் குறை கூறுவதெல்லாம் நின் பெற்றோரையே யல்லாது, நின்னையன்று. அவரைப் பழிப்பதையும் இனி யான் செய்யேன். இந்நோயைத் தாங்கும் வரையில் தாங்குவேன். தாங்க இயலாவாறு பெரிதாயின், அந்நிலையில், அந்நோயைப் போக்கவல்லள் நீயேயாதல் அறிந்து, நின்னைப் பெறவே வழி செய்வேன். என்பால் அன்பு கொண்டு, என்னை ஆட்கொள்ளா யாயின், நின்னைப் பலர் அறியப் பெற்று மணந்து