பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 புலவர் கா. கோவிந்தன்

"உன்மீது காதல் கொண்டு, அக்காதல் நிறைவேறுப் பெறாமையால், கடுந்துயர் உற்று, உயிர் ஊசலாட நான் வருந்துகின்றேன். அதை நீ அறிந்திலை. அறியாமை என் குற்றம் அன்று. அதை அறிந்து கொள்ளும் பருவம் பெற்றிலேன் யான். ஆகவே, என் மீது குற்றம் இல்லை! என்று கூறுவையாயின், அதை வேண்டுமானால் ஒப்புக் கொள்வேன். ஆனால் உன்னைக் கண்டவர் உள்ளத்தில் தந்த நோயை நீயே வந்து தீர்ப்பதல்லது, வேறு எவராலும், எம்மருந்தாலும் தீர்க்கலாகாக் காதல் நோயை வளர்த்து விட வல்ல பேரழகை, நீ இயல்பாகவே பெற்றிருப்பதை அறிந்தும், அம்மட்டோடு அமையாது, தம் செல்வச் செருக்கால், உயர்ந்த ஆடை அணிகளால் மேலும் ஒப்பனை பல செய்து வெளியே அனுப்பிய உன் பெற்றோர் மீதும் குற்றம் இல்லை எனக் கூறி மறுப்பின் அதை யான் ஏற்றுக் கொள்ளேன். -

“நின்பால் கொண்ட காதல் மிகுதியால் யான் என் அறிவை இழந்தேன்; ஆண்மையை இழந்தேன்; அருளை மறந்தேன்; ஒழுக்கம் குன்றினேன். இவ்வாறு யான் நிலை கெட்டு அழியுமாறு என் உள்ளத்தில் காதல் வேட்கையை எழுப்பிவிட்ட நீ, அதை அறிந்து கொள்ளும் அறிவு வாய்க்கப் பெறா நின் இளமையால், அதை அறிந்திலை. ஆதலின், வேண்டுமானால் இது என் குற்றம் அன்று! என்று கூறு. அதை யானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நின் உடற் பாரத்தையே தாங்க மாட்டாது தளர்ந்து போகுமளவு சிறுத்த இடை உடைமையால் பெற்ற நின் பேரழகைக் கண்டு, அம்மட்டோடு அமையாது, தம் செல்வச் செருக்கால் உனக்கு அழகிய ஆடை உடுப்பித்தும்,