பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இச் 177

கைவளை கலகலவென நடந்து செல்லும் நடையழகு நாவினால் நவிலும் தரமன்று.

இத்தகு பேரழகு வாய்ந்த பெண்ணின் நல்லாளைக் காணும் பேறு ஒர் இளைஞனுக்குக் கிடைத்தது. அவளை அக்கோலத்தில் பல நாள் கண்டு கண்டு மகிழ்ந்தான்் அவன். அழகின் திருவுருவாம் அவள்பால் அவன் உள்ளம் சென்றது. அவள் பேரழகிற்குப் பணிந்துவிட்டான். அவன் உள்ளத்திலே அவள் இடம் பெற்றுவிட்டாள். ஆயினும், செல்வ வாழ்வில் வாழும் அவளைப் பெற்று மகிழ்தல் அவனால் இயலவில்லை. அதனால், அவன் துயர் உற்றான். அக்காதல் நோய் கட்டுக் கடங்காது வளர்ந்தது. அதன் பயனாக, அவன் உடல் நலம் குன்றிற்று. கெட்ட அந்நலத்தை மீண்டும் பெற எவ்வளவோ முயன்றான். அவன் பண்ணிய மருத்துவம் அத்தனையும் பயனில வாயின. அவள் அன்பைப் பெற்றாலன்றி, அவன் நலம் பெற இயலாது; அவன் உயிர் வாழாது என்ற நிலை வந்துற்றது. அவன் தன் பொருட்டு அடையும் துயர் எதையும் அவள் அறிந்திலள். அதை அறியும் பருவமும் அவளுக்கு இல்லை. அதனால், அவள் என்றும் போல், தன் பேரழகு புறம் தோன்றப், பெருமிதமாக ஊர்ப்புறம் நோக்கி உலாவச் சென்றாள். அவ்வாறு செல்வாளை, அவள் நினைவால் வருந்தும் அவ்விளைஞன் கண்டான். அவளைத் தொடர்ந்து சென்று, ஒரிடத்தே தடுத்து நிறுத்தி, அவள் உடலழகையும், பொன்னாலாய அணிகலச் சிறப்பையும் வாயாரப் புகழ்ந்தான்். பின்னர், அவள்பால் பின்வருமாறு கூறினான்: -

குறிஞ்சி-12