பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ↔ புலவர் கா. கோவிந்தன்

மகளும் ஒருத்தி. அவளே, அவருள் சிறந்தவள். ஆடும் நேரம் ஒழிந்த நேரங்களிலும், அவளைப் பிரியாது, அவள் உண்ணும்போதும், உறங்கும்போதும் உடனிருப்பவள் அவளே. ஆகவே, அவள் துணை கிடைத்துவிடின், தன் காதலுக்குக் கேடு நிகழாது என உணர்ந்தாள். அதனால், தன் காதலை அவளுக்கு உணர்த்தி, அவள் துணை பெற விரும்பினாள். ஆனால், பிறர்க்குத் தன் காதலை உணர்த்த அவள் பெண்ணுள்ளம் நாணிற்று. அதனால், அதைத் தான்் அறிவியாது, அவன் வழி அறிவிக்க விரும்பினாள். தோழிக்கும் தனக்கும் உள்ள உறவை, அவனுக்குத் தெரிவித்து, “நாளை வருங்கால், அவளைக் கண்டு, நம் காதல் உணர்வை உணர்த்தி, அவள் துணை பெற்று அவளோடு வருக!” என வேண்டிக் கொண்டாள். அவனும் அதற்கு இசைந்து சென்றான்.

மறுநாள், தன் காதலியைக் காண வந்த அவன், இடைவழியில் தோழியைக் கண்டான். தன் காதல் வாழ்வு பயன்கொள்ளத் துணை புரிவாள் அவள், துணை புரியும் அருள் உள்ளமும் உடையாள் என அறிந்து, அவள்பால் குறை கூறத் துடித்தது அவன் உள்ளம். ஆனால், "ஒரு பெண்ணின்பால் காதல் கொண்டேன் நான்!” எனத் தனக்கு அறிமுகம் இல்லாதாரிடத்தே, அதுவும், அறிமுகம் அற்ற ஒரு பெண்ணிடத்தில், கூற நாணிற்று அவன் நா. மேலும் வேண்டுவார்க்கு வேண்டுவன அளிக்கும் வண்மையும், அவ்வாறு அளிக்கப் பெரும் பொருள் ஈட்டும் வன்மையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தான்், ஒரு பெண்ணின் முன் நின்று, "என் காதல் நிறைவேற நின் துணை வேண்டி நிற்கின்றேன்!” என்று கூற நாணிற்று