பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

குறித்ததை முடிப்பவன்

பெரும் பொருளும், அப்பொருளை வறியார்க்கு வாரி வழங்கும் பேரருளும் வாய்க்கப் பெற்ற வளமார் குடியிற் பிறந்த பெண்ணொருத்தி, தங்கள் தினைப் புனத்தைக் காத்திருந்தாள். அவளை இரவிலும், பகலிலும் பிரியாது உடனிருந்து ஆடி மகிழும் தோழியர், ஒருநாள், அவளைத் தனித்திருக்க விடுத்து எங்கோ சென்றிருந்தனர். அக்காலை ஆங்கு வந்தான்் ஒர் இளைஞன். அன்பு, அருள், அறம் உணர் அறிவு, பழியஞ்சும் பண்பு, வாய்மை, வள்ளன்மை முதலாம் குணங்களைக் குறைவறப் பெற்ற' அவ்விளைஞன், அப்பெண்ணின் பேரழகைக் கண்டு காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். அவனைச் சிறிது போதும் பிரியாதிருந்து பேரின்பம் நுகர விரும்பிற்று அவள் உள்ளம். ஆனால், அவளை அவள் தோழியர், இமைப்பொழுதும் பிரியார் ஆதலின், அவர் அறியாவாறு அதை அடைதல் இயலாது என உணர்ந் தாள். தோழியருள் தன்னை வளர்த்த செவிலித்தாயின்