பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இல் புலவர் கா. கோவிந்தன்

பதம் என்ப.16. உlஇய- செய்த:17. அஞர் - மனக்கவலை, எவ்வம் - துயரம், 23. பொன் செய்வாம் - காதலனைப் பெற்றுப் பேரழகு பெறுவாம் என்பதைக் குறிக்க மகளிர் வழங்கும் ஒரு குறியீட்டுச் சொல்; 24 ஆறு - ஒழுக்க நெறி; 25. வாய் - உண்மை; 28. சிறிது ஆங்கே - ஆங்கே சிறிது என மாற்றி அவ்வாறு அவன் இறந்து படுதல் இல்லை எனப் பொருள் கொள்க. அம்பல் - ஒருத்தியின் காதல் ஒழுக்கத்தைப் பிறர் அறியாவாறு தமக்குள்ளே கூறிப் பழித்தல், அலர் - அதைப் பலர் அறியக் கூறிப் பழித்தல், 29. நயப்புஇல் - விருப்பத்தைக் கவராத, பிறப்பிலி - நற்குடிப் பிறப்பிற்கேற்ற நல்லொழுக்கம் இல்லாதவன்; 32. நயவரவு இன்றுபொருந்தாது.