பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ல் புலவர் கா. கோவிந்தன்

யினையும், அவன் அப் பெண்ணின்பால் கொண்டுள்ள பேரன்பினையும் கண்டு, உள்ளம் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்ள, நடந்து, அப் பெண்ணிருக்கும் இடம் சென்றடைந்தாள்.

செல்வாளைப் பின் தொடர்ந்தான்் இளைஞனும். அவன் தன்னை நோக்கி வருவதை, அப்பெண்ணோடு உடனிருந்து கண்ட தோழி, அவளுக்குக் காட்டி, அவன் சற்றுமுன், தன் பால் வந்து நடந்து கொண்ட முறையையும்கூறி, "ஏடி பெண்ணே! சிந்தையும் செயலும் தம் நிலை கெட்டுப் போக வருந்தி வரும் அவனைக் காண். அவனை அவ்வாறு வருந்தும் அவன் மனக்குறைதான்் யாதோ?’ என்று வினவினாள்.

அவள் அப்பெண்ணோடு, அவ்வாறு பேசிக் கொண் டிருக்கும்போதே, அவனும் ஆங்கு வந்து சேர்ந்தான்். தன்னை விடாது பின்தொடர்ந்து வந்துளான் எனினும், தன் குறையை வாய் திறந்து கூறும் வன்மை அவனுக்கு இல்லை என்பதை அறிந்தவளாதலின், இதுகாறும் அவன் செய்கைகளை வாளா பார்த்திருந்த அவள், தான்ே முன் வந்து, "ஏடா! செல்லும் இடந்தோறும் நின்நிழல், நின்னை விட்டுப் பிரியாது தொடர்ந்து வருதல் போல், நீ என்னைத் தொடர்ந்து வருகின்றனை. உள்ளத்தில் ஒரு குறை யுடையேன். அதைத் தீர்க்கும் வழியறியாது வருந்து கின்றேன்! என்பதை, நின் முகக் குறிப்பால் உணர்த்து கின்றனை. என்பால் பெற வேண்டியது யாதேனும் உளகொல்? என் குறை இது. எனக்கு வேண்டுவது இது! என, வாய் திறந்து விளங்கக் கூறுவாயாக!” என, நயம்படக் கூறினாள்.