பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 203

அவள் அவ்வாறு கூறக் கேட்ட அவ்விளைஞன், "அன்புடையாய் ! நின்பால் கூறத்தக்க குறையேதும் இல்லை. யான் விரும்பும் பொருளும் நின்பால் இல்லை. நான் குறைகூற வேண்டுவது, இதோ நிற்கும் இப்பெண்ணி னிடத்தில், நான் விரும்பும் பொருளும் இவளிடத்திலேயே உளது. கேட்டால், இவள் மறுக்காது அளிப்பாளோ? முன்னர் அதைக் கூறு. என் குறை யாது என்பதைப் பின்னர்க் கூறுகிறேன்,” என்றான்.

இளைஞன், 'இவள்பால் கொடைக்குணம் உளதோ இல்லையோ!' என ஐயுறுகின்றனன், என்பதை அறிந்து கொண்ட தோழி, "அன்ப! தம்பால் வந்து, வறுமையின் கொடுமை காட்டி இரந்து நிற்பார்க்கு, அவர் வேண்டும் பொருளை வழங்கி வாழ மாட்டா வறுமை ஒருவர்க்கு வாய்த்திடுமாயின், அந்நிலையில், உயிரோடிருந்து வாழ்த லினும், மாண்டு மறைந்து போதலே மாண்புடைத்து. இவ்வுயர்ந்த பண்பாட்டை அறிந்தவர் நாங்கள். இதோ நிற்கும் இவள் தந்தை, ஈகைச் சிறப்பையும், ஈயாமையின் இழிவையும் உணர்ந்தவன். தன்பால் வந்து இரப்பவர் எவராயினும், அவர்க்கு அவர் விரும்பும் பொருளைப் பெரும் அளவில் தந்து, அன்புரை வழங்கி அனுப்பும் அருள் உள்ளமும், அதற்கேற்ற செல்வ வளமும் வாய்க்கப் பெற்றவன். அவன் பெற்ற மக்கள் நாங்கள். வாழையின் கீழ்க் கன்றும் வழங்கும் என்பதை நீ அறிவை. ஆகவே, எங்கள் கொடைக் குணத்தை ஐயுறாது, நீ வேண்டுவது யாது என்பதை விளங்கக் கூறு!" எனக் கூறினாள்.

- அது கேட்ட அவ்விளைஞன், "நான் அப்பெண் னின் பேரருள் வேண்டி நிற்க, இத்தோழி, தந்தை பெரும்