பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இ புலவர் கா. கோவிந்தன்

நல்லனவற்றையும் நல்லன ஆகா எனக் கூறுவர். அவ்வாறு கூறுவார்க்கும் ஏற்பன சொல்லி, அவை நல்லனவே என்பதை அவரும் ஏற்குமாறு செய்யும் ஆற்றலன். ஆனால், அவன்பாற் காணலாம் குறை ஒன்றும் உண்டு. அவன் செய்வது நல்லதாகவே இருக்கும். ஆனால், அது பலர்க்குத் தீது போல் தோன்றும். அவ்வாறு, அதைத் தீது என்று கருதுவார்க்கு, அது தீதன்று என்பதை விளக்கி, அவர் ஒப்புதலையும் பெற்றுப் பின்னரே செய்தல் வேண்டும் எனும் பொறுமை அவன்பாற் பொருந்தவில்லை. நன்று எனப்பட்டதைத் துணிந்து முதலிற் செய்துவிடுவன். பின்னர் அது குறித்துக் கூறுவாரைக் கண்டு, காரணம் காட்டித் தெளிவிப்பன். இதுவே அவன்பால் காணலாம் குறை. ஆனால், இதையும் ஒரு வகையாய் நோக்கின், குறையாகத் தோன்றாது. "நல்ல ஒரு செயலை விரைந்து முடித்தலே நன்று. நாலு பேர் கருத்தை அறிந்து, மாறுபடுவார் உளரேல், அவர்க்கு ஏற்பன கூறி இசைவித்துப் பின்னர்ச் செய்வது என்றால் இயலாது. அதற்குள், அச்செயல் தன் பயன் இழந்து போதலும்கூடும். ஆகவே, அதுவே நன்று என்பது நன்கு புலனாகிறது. "ஆகவே, முதலில் செய்து முடித்து விடுவோம். பிறகு தடை சொல்வாரைக் காரணம் காட்டிச் சரி செய்து கொள்ள லாம்!” இவ்வாறு எண்ணும் அவன் எண்ணத்திலே குறையிருக்கக் கண்டிலம்.

அவனைப் போன்றே, அவளும் ஒரு புதுமைப் பெண். யாரேனும் தவறு செய்தால், அத்தவறு செய்தவன் தன்னைக் காதலிக்கும் தன் அன்பிற்குரிய ஆடவனே யாயினும், அவன் செய்வது தவறு என்பதை, அவன்