பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

கால் நிலங் கிளற நின்றாள்

அறிவும் ஆண்மையும் வாய்ந்த ஓர் இளைஞனும், அன்பும் அழகும் வாய்ந்த ஒரு பெண்ணும், ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டனர். காதல் கொண்ட னராயினும், தாம் விரும்பும் போதெல்லாம் கண்டு, கலந்து உரையாடி, மகிழ்ந்து வாழும் வாய்ப்பு அவர்க்கு வாய்த்திலது. அப்பெண் பெருஞ்செல்வர் மகளாதலினா லும், அவர் அவளைத் தம் கண்மணிபோல் காத்து வந்தனராதலானும், உயர்குணமும், உலகியல் உணர்வும் உடைய தோழியொருத்தி, அவளைப் பகலிலும் இரவிலும் பிரியாதிருந்தாள் ஆதலாலும் அவளை எளிதிற் காண்டல் அவனால் இயலவில்லை. ஆயினும், அவளைக் காணாது ஒரு நாளைக் கழித்தலும் அவனுக்கு அரிதாயிற்று. அதனால், அவளைத் தான்் விரும்பும் போதெல்லாம் கண்டு மகிழ்தற்காம் வழி யாது எனச் சிந்திக்கத் தொடங்கினான். அவளைச் சிறிது போதும் பிரியாது,